சுடச்சுட

  

  கலசப்பாக்கம் தொகுதியில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

  By DIN  |   Published on : 29th May 2017 08:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கலசபாக்கம் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட கலசப்பாக்கம், புதுப்பாளையம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் ஞாயிற்றுக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
  கலசப்பாக்கம் ஒன்றியத்துக்கு உள்பட்ட விண்ணுவாம்பட்டு ஊராட்சியில் ரூ.21.17 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் ஏரி புனரமைப்பு, மதகு சீரமைத்தல் பணிகளையும், கலசப்பாக்கம், புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியங்களில் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் ஏரி சீரமைப்பு, ஆழ்துணை கிணறு, குடிநீர் குழாய், சிறு மின்விசை பம்புடன்கூடிய குடிநீர்த் தொட்டி அமைத்தல் உள்ளிட்ட 16 திட்டப் பணிகளையும், பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளையும் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளை அவர் கேட்டுக் கொண்டார்.
  இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களுக்கு அமைச்சர் அளித்த பேட்டி: திருவண்ணாமலை மாவட்டத்தில் 825 குடிநீர்த் திட்டப் பணிகள் ரூ.20 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் தற்போது 90 சதவீதப் பணிகள் முடிக்கப்பட்டு பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
  கலசப்பாக்கம் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் நிதியிலிருந்து குடிநீர்த் திட்டப் பணிகளுக்காக ரூ.17 லட்சம் ஒதுக்கப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், மாவட்டத்தில் தாய் திட்டம் மூலம் 2-ஆவது கட்டமாக ரூ.36 கோடியில் பணிகள் தொடங்கப்படவுள்ளன.
  இதேபோல, ஏரி, குளங்களில் குடிமராமத்துப் பணிக்காக முதல்கட்டமாக தமிழகத்தில் ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது 2-ஆவது கட்டமாக ரூ.300 கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளன என்றார்.
  ஆய்வின்போது, எம்எல்ஏ வி.பன்னீர்செல்வம், கலசப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் சஞ்சீவ்குமார், தனி அலுவலர் சத்தியமூர்த்தி மற்றும் அரசு அலுவலர்கள், முன்னாள் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், கூட்டுறவு சங்கத் தலைவர்கள் உடனிருந்தனர்.

   

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai