சுடச்சுட

  

  செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நூற்றாண்டு விழா கொண்டாடுவது குறித்த ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
  செய்யாறில் கடந்த 1917-ல் தொடங்கப்பட்ட அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, 2017-ஆம் ஆண்டில் 100-ஆவது ஆண்டை பூர்த்தி செய்கிறது. இந்தப் பள்ளி தொடங்கப்பட்டு 100 ஆண்டுகள் முடிவதையொட்டி, பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் நூற்றாண்டு விழாவை கொண்டாட முடிவு செய்தனர். அதற்கான ஆலோசனைக் கூட்டம் பள்ளித் தலைமை ஆசிரியர் என்.ஆர்.சங்கரலிங்கம் தலைமையில் நடைபெற்றது.
  கூட்டத்தின்போது, பள்ளியின் நூற்றாண்டு விழாவை சிறப்பாகக் கொண்டாடுவது என்றும், இது குறித்த தகவல்களை பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்களுக்கு தெரிவிப்பது என்றும் தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தில் முன்னாள் செய்யாறு கல்வி மாவட்ட அலுவலர்களான பி.புண்ணியகோட்டி, எஸ்.சிவஞானம், பேராசிரியர் டி.ஜி.நாகராஜன், முன்னாள் மாணவர்கள் அரங்கநாதன், பொன்னுசாமி, எஸ்.சண்முகம், எம்.பாஸ்கரன், பி.எஸ்.ஏகாம்பரம், பி.நடராஜன், வி.தெய்வசிகாமணி, க.செந்தில்குமார் மற்றும் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
  ஏற்பாடுகளை பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகி பி.லோகநாதன், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் செய்திருந்தனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai