சுடச்சுட

    

    விபத்துகளை தடுக்கும் வகையில் வாகன விளக்குகளில் கருப்பு வில்லை ஒட்டிய போலீஸார்

    By DIN  |   Published on : 29th May 2017 08:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வாகன விபத்துகளை தவிர்க்கும் வகையில், சேத்துப்பட்டு பஜார் வீதியில் வாகனங்களின் முகப்பு விளக்குகளில் போலீஸார் சனிக்கிழமை கருப்பு வில்லை (ஸ்டிக்கர்) ஒட்டி, வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
    அப்போது, வாகனங்களில் அதிக ஒளி தரக்கூடிய முகப்பு விளக்குகளை பயன்படுத்துவதால், எதிரில் வரும் வாகன ஓட்டிகள் சாலை தெரியாமல் விபத்துகளை சந்திக்கின்றனர்.
    பல்வேறு சமயங்களில் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. எனவே, இதுபோன்ற விபத்துகளைத் தவிர்க்கும் வகையில், வாகன முகப்பு விளக்குகளில் கருப்பு வில்லை ஒட்டப்படுகிறது.
    இந்தக் கருப்பு வில்லையை பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் பாதுகாக்க வேண்டும். இந்தக் கருப்பு வில்லை நமது வாழ்வுக்கு ஒளிமயமான வாழ்வை அளிக்கும் என்று போலீஸார் தெரிவித்து வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும், சாலை விதிகள் குறித்து போலீஸார் எடுத்துக் கூறினர்.
    இந்தப் பணியில் சேத்துப்பட்டு காவல் நிலைய ஆய்வாளர் ஜோதி, உதவி ஆய்வாளர்கள் பார்த்தசாரதி, வள்ளியம்மாள், அசோகன் மற்றும் போலீஸார் ஈடுபட்டனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai