சுடச்சுட

    

    சேத்துப்பட்டு அருகே அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஓட்டுநர்கள் உள்பட 25 பேர் காயமடைந்தனர்.
    சேத்துப்பட்டை அடுத்த நெடுங்குணம் கிராமத்தில் திங்கள்கிழமை மாலை திருவண்ணாமலையில் இருந்து காஞ்சிபுரம் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தும், சென்னையில் இருந்து போளூர் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில், காஞ்சிபுரம் நோக்கிச் சென்ற பேருந்து மரத்தில் மோதியது. போளூர் நோக்கிச் சென்ற பேருந்து பள்ளத்தில் இறங்கியது.
    இதனால், பேருந்து ஓட்டுநர்கள் விருஷபதாஸ், பிரகாஷ் உள்பட பேருந்துகளில் பயணித்த அபிநயா என்கிற 2 வயது குழந்தை, வந்தவாசியை சேர்ந்த தமிழ்ச்செல்வி, செஞ்சி வட்டம், மேல்காரணியைச் சேர்ந்த காயத்ரி, சாந்தி, செல்வி, குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை, சிவகுரு உள்பட 25 பேர் காயமடைந்தனர்.
    இதுகுறித்து தகவலறிந்த சேத்துப்பட்டு காவல் நிலைய ஆய்வாளர் ஜோதி, காவல் உதவி ஆய்வாளர் பார்த்தசாரதி மற்றும் போலீஸார், தீயணைப்புத் துறையினர், ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ஏழுமலை ஆகியோர் நிகழ்விடத்துக்குச் சென்று காயமடைந்தவர்களை மீட்டு, சேத்துப்பட்டு, வந்தவாசி, திருவண்ணாமலை அரசு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai