சுடச்சுட

    

    போளூரில் சுரங்கத் துறை அதிகாரியைத் தாக்கியதாக 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.
    திருவண்ணாமலை மாவட்ட புவியியல் - சுங்கத் துறை உதவி இயக்குநரகத்தில் கண்காணிப்பாளராகப் பணியாற்றி வருபவர் ராஜேந்திரன்.
    இவர், போளூரை அடுத்த வசூர் அருகே செய்யாற்றில் மணல் கடத்தப்படுவதாக வந்த தகவலையடுத்து, அங்கு திங்கள்கிழமை ரோந்து சென்றார்.
    திருவண்ணாமலை - வேலூர் சாலையில் ஆஞ்சநேயர் கோயில் அருகே பணியில் இருந்த போது, அந்த வழியாக வந்த 3 லாரிகளை நிறுத்தி, விசாரணை மேற்கொண்டார்.
    அப்போது, போளூர் கோவிந்தசாமி தெருவைச் சேர்ந்த கீரி ஏழுமலை (41), நல்லாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சுந்தரம் (49), தயாளன், ஏழுமலை ஆகிய 4 பேரும் கண்காணிப்பாளரை பணி செய்ய விடாமல் தடுத்து, இரும்பு கம்பியால் தாக்கினராம்.
    இதுகுறித்து போளூர் காவல் நிலையத்தில் சுரங்கத் துறை அதிகாரி ராஜேந்திரன் 4 பேர் மீதும் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸார், கீரி ஏழுமலை, சுந்தரம் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
    தயாளன், ஏழுமலையை தேடி வருகின்றனர். மேலும், மணல் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட 3 லாரிகளையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai