Enable Javscript for better performance
இடைநிலை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு- Dinamani

சுடச்சுட

    

    திருவண்ணாமலை மாவட்டத் தொடக்கக் கல்வித் துறையில் செவ்வாய்க்கிழமை (மே 30) இடைநிலை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெறுகிறது.
    மாவட்டத் தொடக்கக் கல்வித் துறையில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கான 2017-18 ஆம் ஆண்டுக்கான பணி நிரவல், பணி மாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வு மே 19-ஆம் தேதி தொடங்கி, நடைபெற்று வருகிறது. திருவண்ணாமலை டி.எம்.டவுன் தொடக்கப் பள்ளியில் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் ஏ.ராஜேந்திரன் தலைமையில் இணையம் மூலம் இந்தக் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. இதன் நிறைவு நாளான செவ்வாய்க்கிழமை (மே 30) இடைநிலை ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் இடம் மாறுவதற்கான பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெறுகிறது.எனவே, கலந்தாய்வுக்கு விண்ணப்பித்துள்ள இடைநிலை ஆசிரியர்கள் அனைவரும் கலந்தாய்வில் தவறாமல் கலந்துகொண்டு பயன் பெறலாம் என்று மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ஏ.ராஜேந்திரன் தெரிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai