சுடச்சுட

  

  போளூரை அடுத்த பாப்பாம்பாடி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ காளியம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை (மே 30) கூழ்வாôóக்கும் விழா நடைபெறுகிறது.
  போளூரை அடுத்த பாப்பாம்பாடி கிராமத்தில் போளூர் - சேத்துப்பட்டு சாலை அருகே ஸ்ரீ காளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் கிராம மக்கள் சார்பில், செவ்வாய்க்கிழமை நண்பகல் ஒரு மணியளவில் கூழ்வாôóக்கும் விழா நடைபெறுகிறது. இரவு அம்மன் திருவீதி உலாவும் நடைபெறுகிறது.
  வள்ளலார் சபையில் முப்பெரும் விழா
  திருவண்ணாமலை, மே 29: வேட்டவலம் வள்ளலார் சபையில் 236-ஆவது மாத அன்னதான விழா, இயல் இசை நாடக விழா, மழை வேண்டி வழிபாடு என முப்பெரும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
  விழாவுக்கு வள்ளலார் திருச்சபை நிறுவனர் ந.சுப்பிரமணிய பாரதியார் தலைமை வகித்தார். திருஅருள்பா, தேவராம், திருவாசகம் பாடல்களின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர், 'தொடுடை செவியன்' என்ற தலைப்பில் க.சம்பந்தனும், 'வேயுறு தொளிபங்கன்' என்ற தலைப்பில் முத்துச்சாமியும், 'புனிதவாய் மலர்ந்து அழுதல்' என்ற தலைப்பில் தங்க.விஷ்வநாதனும், 'தென்னவன் தனக்கு நீறு' என்ற தலைப்பில் கோ.கோவிந்தராஜனும், 'மந்திரமாவது நீறு' என்ற தலைப்பில் மா.கோவிந்தசாமியும், 'வாழ்க அந்தணர்' தலைப்பில் வைத்தியலிங்கமும் சிறப்புச் சொற்பொழிவாற்றினர்.
  பிற்பகல் ஒரு மணிக்கு ந.சுப்பிரமணிய பாரதியார் தலைமையில் வில்லிசை அரங்கமும், மாலை 3 மணிக்கு கவியரங்கமும் நடைபெற்றன. காலை, மதியம், இரவு என 3 வேளைகளிலும் 750 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai