Enable Javscript for better performance
சாலை விபத்தில் தொழிலாளி சாவு- Dinamani

சுடச்சுட

    

    செய்யாறு அருகே ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் காயமடைந்தார்.
    செய்யாறை அடுத்த தென்கழனி கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளிகள் கன்னியப்பன் (48), சுரேஷ் (35). இவர்கள் இருவரும், மோட்டார் சைக்கிளில் ஞாயிற்றுக்கிழமை தென்கழனி கிராமத்தில் இருந்து சென்றனர். ஆற்காடு - செய்யாறு சாலையில் பூமாந்தாங்கல் கூட்டுச் சாலை அருகே வந்த போது, மோட்டார் சைக்கிள் திடீரென நிலை தடுமாறி, சாலையோரத்தில் இருந்த மைல்கல்லின் மீது மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட இருவரும் காயமடைந்தனர். அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு, செய்யாறு அரசு மருத்துமனையில் சேர்த்தனர். அங்கு கன்னியப்பன் உயிரிழந்தார். சுரேஷ் தீவிர சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
    இந்த விபத்து குறித்து, கன்னியப்பனின் மனைவி விஜியா மோரணம் போலீஸில் புகார் அளித்தார்.
    அதன்பேரில், காவல் உதவி ஆய்வாளர் ஷாபூதின் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகிறார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai