சுடச்சுட

  

  ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் அருகே 17 வயதுச் சிறுமியை ஏமாற்றித் திருமணம் செய்ததாக கட்டடத் தொழிலாளியை ஆரணி மகளிர் போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
  ஆரணியை அடுத்த ஒண்ணுபுரம் கிராமத்தைச் சேர்ந்தவரின் மகள் 17 வயதுச் சிறுமி. கண்ணமங்கலம் அருகே உள்ள வண்ணாங்குளம் கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் மகன் தருமன் (49). இவர், கண்ணமங்கலம் பகுதியில் கட்டட வேலை செய்து வருகிறாராம். அப்போது, கட்டட வேலைக்கு உதவியாளாக இருந்து வந்த 17 வயதுச் சிறுமியை, தருமன் ஆசை வார்த்தைகள் கூறி, ஏமாற்றித் திருமணம் செய்து கொண்டாராம்.
  இந்த நிலையில், சிறுமி கர்ப்பமாக உள்ளதையறிந்த அவரது பெற்றோர் ஆரணி மகளிர் காவல் நிலையத்தில் தனது மகளை தருமன் ஏமாற்றித் திருமணம் செய்து கொண்டதாக புகார் அளித்தனர். அதன் பேரில், தருமனை மகளிர் போலீஸார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai