சுடச்சுட

    

    தண்டராம்பட்டு அருகே சிறுமியைக் கடத்தியதாக கொத்தனாரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
    தண்டராம்பட்டை அடுத்த ராதாபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயியின் 17 வயதுச் சிறுமி கடந்த 23-ஆம் தேதி இரவு பெற்றோருடன் வீட்டில் தூங்கினார். மறுநாள் காலை பார்த்தபோது அவரைக் காணவில்லையாம். நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் தேடியும் அவர் கிடைக்கவில்லையாம்.
    இதுகுறித்து, தண்டராம்பட்டு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில், திருவண்ணாமலையை அடுத்த கீழ்க்குப்பம் கிராமத்தில் தங்கியிருந்த சிறுமியையும் அவரைக் கடத்திய கொத்தனார் பாண்டியனையும் (19) திங்கள்கிழமை போலீஸார் பிடித்தனர்.
    விசாரணையில், கட்டட வேலைக்காக ராதாபுரம் கிராமத்துக்கு வந்து சென்றபோது, சிறுமியைக் காதலித்ததாகவும், திருமணம் செய்து கொள்வதற்காக அவரைக் கடத்திச் சென்றதாகவும் பாண்டியன் கூறியுள்ளார்.
    இதனையடுத்து, சிறுமியைக் கடத்தியதாக பாண்டியனை போலீஸார் கைது செய்தனர். சிறுமியை அவரது பெற்றோருடன் போலீஸார்அனுப்பி வைத்தனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai