சுடச்சுட

  

  செய்யாறு அறிஞர் அண்ணா அரசுக் கலைக் கல்லூரி பொன் விழா கொண்டாட்டத்தின் முதல் நாள் நிகழ்ச்சி திருவள்ளுவர் கூடத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
  நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ரா.கீதாராணி தலைமை வகித்தார். வணிகவியல் துறைத் தலைவர் ஆ.மூர்த்தி வரவேற்றார். நிகழ்வில், மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, செய்யாறில் அரசுக் கலைக் கல்லூரி தொடங்கக் காரணமாக இருந்த மறைந்த தமிழக சட்டப்பேரவை முன்னாள் தலைவர், புலவர் கா.கோவிந்தன் ஆகியோரின் உருவப் படங்களை தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் திறந்து வைத்து, மரியாதை செலுத்தினார்.
  தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில், செய்யாறு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் தூசி கே.மோகன் பங்கேற்று, தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கல்லூரி வளாகத்தில் அரங்கம் கட்டுவதற்கு ரூ. 50 லட்சம் நிதி ஒதுக்கித் தரப்படும் என்றார்.
  மேலும் அவர் பேசுகையில், கல்லூரியில் பயிலும் காலத்தில் லட்சியத்தோடு படித்தால் வாழ்க்கையில் எளிதாக வெற்றி அடையலாம். கல்வி என்பது நிரந்தரச் சொத்தாகும். அதை யாராலும் அழிக்க முடியாது என்றார். நிகழ்ச்சியில் ரூசா தொண்டு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்
  அமுதாபாண்டியன், தமிழ்த் துறைத் தலைவர் க.மாலா, கல்லூரி முன்னாள் மாணவர்கள் மகேந்திரன், தசரதன், கே.வெங்கட்ராமன், வழக்குரைஞர் புவனேந்திரன், தீயணைப்பு நிலைய அலுவலர் சரவணன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக, முன்னாள் மாணவர்கள் சார்பில், கல்லூரி வளாகத்தில் நிறுவப்பட்ட மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் சி.என்.அண்ணாவின் உருவச் சிலையை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் திறந்து வைத்தார்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai