சுடச்சுட

    

    செங்கத்தை அடுத்த புதுப்பாளையத்தில் நடைபெற்று வரும் திட்டப் பணிகளை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    புதுப்பாளையம் ஒன்றியத்துக்கு உள்பட்ட காஞ்சி, வாசுதேவன்பட்டு, அல்லியந்தல், அரிதாரிமங்கலம், கொட்டகுளம் உள்ளிட்ட கிராமங்களில் ஆரம்பப் பள்ளிக்கான புதிய கட்டடம், குடிநீர் கிணறு வெட்டும் பணி, கிணறுகளை ஆழப்படுத்தும் பணி, கிராம சேவை மையக் கட்டடம் கட்டும் பணி, தார்சாலை அமைக்கும் பணிகள் சுமார் ஒரு கோடி ரூபாய் செலவில் நடைபெற்று வருகின்றன.
    இந்தப் பணிகளை தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    கலசப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம், ஊரக வளர்ச்சி செயற்பொறியாளர் ராமகிருஷ்ணன், உதவிச் செயற்பொறியாளர் தனசேகர், ஆணையாளர் மணி எழிலன், நாகேஷ்குமார் உள்பட அரசுத் துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.
    கலசப்பாக்கம் ஒன்றியத்தில்...
    கலசப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம், விண்ணுவாம்பட்டு, கலசப்பாக்கம், எர்ணாமங்கலம், பாணாம்பட்டு, ஈச்சம்பூண்டி, அருணகிரிமங்கலம், கடலாடி பகுதிகளில் குடிநீர், வளர்ச்சி திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
    இந்தப் பணிகளை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் ஞாயிற்றுக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    விண்ணுவாம்பட்டு கிராமத்தில் தாய் திட்டத்தில் ரூ. 21.17 லட்சம் மதிப்பில் ஏரி சீரமைப்பு, மதகு கட்டும் பணி, கலசப்பாக்கம் வட்டாட்சியர் அலுவலகம் அருகே ரூ. 2 லட்சம் மதிப்பில் புதிதாக ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணி, கலசப்பாக்கம் அருகே பொது நிதி ரூ. 2.50 லட்சம் மதிப்பில் புதிதாக ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணி உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் ஆய்வு செய்தார்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai