சுடச்சுட

    

    நாட்டுக் கோழிப் பண்ணை அமைக்க விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

    By DIN  |   Published on : 30th May 2017 01:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவண்ணாமலை மாவட்டத்தில் நாட்டுக் கோழிப் பண்ணை அமைக்க விரும்புவோர் உடனே விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது.
    கோழிப் பண்ணை தொழிலை ஊக்குவிக்கும் நோக்கில் கோழிகள் உற்பத்தித் திட்டத்தை ரூ. 25 கோடியில் செயல்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்துக்கு 250 நாட்டுக் கோழிப் பண்ணைகள் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
    இந்தத் திட்டத்தில் விவசாயிகள், தனி நபர்கள், தொழில் முனைவோர், சுய உதவிக் குழுவினர் பயன் பெறலாம்.
    கோழிப் பண்ணை அமைக்க போதிய நிலம் விண்ணப்பதாரர் பெயரிலோ, அவரது குடும்ப உறுப்பினர்கள் பெயரிலோ இருக்க வேண்டும். கோழி வளர்ப்பில் முன் அனுபவம் உள்ளவர்கள், கோழி வளர்ப்பில் ஆர்வமுள்ள விவசாயிகள் இந்தத் திட்டத்தின் கீழ் பயன் பெறலாம்.
    பயனாளிகள் சொந்த முதலீட்டில் (அ) வங்கி மூலம் கடன் பெற்று இந்தத் திட்டத்தில் கோழிப் பண்ணை அமைக்கலாம். நாட்டுக் கோழிப் பண்ணை அமைக்கத் தேவையான உபகரணங்கள், கோழி தீவனம், கோழிக் குஞ்சுகள் வாங்குதல், அசோலா உற்பத்தி உள்ளிட்டவற்றை அமைக்க ஆகும் மொத்த செலவில் 25 சதவீதம் மானியம் வழங்கப்படும்.
    தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு தமிழ்நாடு அறிவியல் பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கும் பயிற்சி மையங்களில் 3 நாள்கள் முறையான பயிற்சி அளிக்கப்படும்.
    தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் வங்கியில் இருந்து ஒப்புதல் கடிதம் (அ) சொந்த நிதிக்கான சான்றுடன் விண்ணப்பங்களை துணை இயக்குநர் (நிர்வாகம்), கால்நடை பராமரிப்புத் துறை, திருவண்ணாமலை ஆரணி என்ற முகவரிக்கு புதன்கிழமை (மே 31) தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் மு.வடநேரே தெரிவித்தார்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai