சுடச்சுட

    

    மத்திய அரசைக் கண்டித்து, திருவண்ணாமலையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    இறைச்சிக்காவும், விற்பனைக்காகவும் பசுக்கள், எருதுகள், ஒட்டகங்களை வெட்டத் தடை விதித்த மத்திய அரசைக் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவண்ணாமலை, அறிவொளிப் பூங்கா எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலர் எச்.ஜமால் தலைமை வகித்தார்.
    மாநிலத் துணைச் செயலர் முஸ்தபா, மாவட்ட திமுக துணைச் செயலர் சாவல்பூண்டி மா.சுந்தரேசன், நகரச் செயலர் ப.கார்த்திவேல்மாறன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநிலத் துணைப் பொதுச் செயலர் கருணா ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.
    ஆர்ப்பாட்டத்தில் முஸ்லிம் முன்னேற்றக் கழக நகரச் செயலர் ஏ.ஆர்.நாசர் உசேன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai