சுடச்சுட

    

    கலசப்பாக்கம் அருகே விவசாயியைத் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.
    கலசப்பாக்கத்தை அடுத்த புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி வீரன் (34). அதே பகுதியைச் சேர்ந்தவர் துரைக்கண்ணு (45). இருவரின் நிலங்களும் அருகருகே உள்ளதாம். நிலத்துக்குச் செல்லும் பொது வழி தொடர்பாக இவர்களுக்கு இடையே முன் விரோதம் இருந்து வந்ததாம்.
    சில தினங்களுக்கு முன்பு வீரன் தனது நிலத்துக்குச் சென்றாராம். அப்போது அங்கு வந்த துரைக்கண்ணு, அவரது மனைவி தனம், சகோதரர்கள் தேவராஜ், ராஜா, ராஜேஷ், ரஞ்சித் ஆகியோர் வீரனை சரமாரியாக தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனராம். இதில், காயமடைந்த வீரன், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து, கலசப்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிந்து துரைக்கண்ணு, தேவராஜ், ராஜேஷ், ரஞ்சித் ஆகியோரை கைது செய்தனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai