சுடச்சுட

    

    இடைநிலை, உடற்கல்வி ஆசிரியர்களுக்கு இன்று பதவி உயர்வு கலந்தாய்வு

    By DIN  |   Published on : 31st May 2017 08:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவண்ணாமலை மாவட்ட அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை, உடற்கல்வி, சிறப்பு ஆசிரியர்கள் பட்டதாரி ஆசிரியர்களாகப் பதவி உயர்வு பெறுவதற்கான கலந்தாய்வு புதன்கிழமை நடைபெறுகிறது.
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 2017-18ஆம் கல்வி ஆண்டுக்கான அரசு, நகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கான பொது மாறுதல், பதவி உயர்வு, பணி நிரவல் கலந்தாய்வு கடந்த 19-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
    திருவண்ணாமலை தியாகி நா.அண்ணாமலைப்பிள்ளை அரசு மேல்நிலைப் பள்ளியில் இந்த கலந்தாய்வு நடைபெறுகிறது. கலந்தாய்வின் நிறைவு நாளான புதன்கிழமை அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், சிறப்பு ஆசிரியர்கள் பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு பெறுவதற்கான கலந்தாய்வு நடைபெறுகிறது.
    எனவே, கலந்தாய்வுக்கு விண்ணப்பித்துள்ள அனைவரும் உரிய நேரத்தில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai