சுடச்சுட

  

  சமுதாயப் பணிக்காக வாரத்தில் 2 மணி நேரம் செலவிடுங்கள்: மாவட்ட ஆட்சியர் பேச்சு

  By DIN  |   Published on : 31st May 2017 08:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சமுதாயத்தில் அக்கறை உள்ளவர்கள் சமுதாயப் பணிக்காக வாரத்தில் 2 மணி நேரம் செலவிடுங்கள் என்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே தெரிவித்தார்.
  செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை பொன்விழா கொண்டாட்டத்தின் இரண்டாம் நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ரா.கீதாராணி தலைமை வகித்தார். விலங்கியல் துறைத் தலைவர் ச.துரைராஜ் வரவேற்றார்.
  இதில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே பேசியதாவது: கல்லூரிப் பருவம் என்பது மாணவர்களாகிய நீங்கள் கனவு காண வேண்டிய பருவம். நீங்கள் வாழ்க்கையில் எந்த நிலையை அடைய வேண்டும் என்று கனவு காண்கிறீர்களோ, அதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும். எந்த ஒரு செயலிலும் முழு மூச்சாக செயல்படுபவர்கள், அந்தச் செயலை செய்து முடித்து வெற்றி காண்பார்கள்.
  சமுதாயத்தில் அக்கறை உள்ளவர்கள் வாரத்தில் 2 மணி நேரம் கல்வியறிவு இல்லாத மனிதர்களுக்கும், படிக்கின்ற பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும் உதவிடும் வகையில், சமுதாயப் பணியில் ஈடுபட வேண்டும் என்றார்.
  இதைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில், கல்லூரியின் பொன்விழா ஆண்டு மலரை மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே வெளியிட, வேலூர் மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் எம்.ஏ.ஜெயராஜ் பெற்றுக் கொண்டார்.
  தொடர்ந்து, தமிழக முன்னாள் முதல்வர் சி.என்.அண்ணாதுரையின் முழு திருவுருவச் சிலையை நிறுவிய முன்னாள் மாணவர்கள் மற்றும் கல்லூரி நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பித்த முன்னாள் மாணவர்களுக்கு பாராட்டுத் தெரிவித்து கேடயம் வழங்கப்பட்டது.
  இதே போன்று, பொன்விழா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற உதவிய கல்லூரிப் பேராசிரியர்களுக்கும், அலுவலகப் பணியாளர்களுக்கும் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.
  நிகழ்ச்சியில் பயிற்சி துணை ஆட்சியர் சுரேஷ், முன்னாள் பேராசிரியர் சீனுவாசன், முன்னாள், இன்னாள் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai