Enable Javscript for better performance
செங்கம் பேரூராட்சிக்கு செயல் அலுவலரை நியமிக்க பொதுமக்கள் கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    செங்கம் பேரூராட்சிக்கு செயல் அலுவலரை நியமிக்க பொதுமக்கள் கோரிக்கை

    By DIN  |   Published on : 31st May 2017 08:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    செங்கம் பேரூராட்சியில் அடிப்படைப் பணிகளை விரைந்து மேற்கொள்ளும் வகையில், பேரூராட்சி செயல் அலுவலரை நியமிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    செங்கம் தேர்வுநிலைப் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இவற்றில் சுமார் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பேரூராட்சி செயல் அலுவலராக இருந்த ஆனந்தன், கடந்த மாதம் பணி மாறுதல் பெற்று வேலூர் மாவட்டம், ஆலங்காயம் பேரூராட்சி செயல் அலுவலராகச் சென்றார். இதையடுத்து, வேட்டவலம் பேரூராட்சி செயல் அலுவலர் கலாதரன், கூடுதலாக செங்கம் பேரூராட்சி செயல் அலுவலராக பொறுப்பேற்றார். செங்கம் பேரூராட்சியில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிப்பதால், தினந்தோறும் குடிநீர்த் தட்டுப்பாடு, மின்விசை மோட்டாருடன் கூடிய குடிநீர்த்தொட்டி பழுது, தெரு விளக்கு பழுது, குடிநீர், கழிவு நீர் கால்வாய் அடைப்பு உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படுகின்றன.
    இதனால் பாதிப்புக்குள்ளாகும் பொதுமக்கள், செங்கம் பேரூராட்சி அலுவலகத்துக்குச் சென்று பிரச்னைகளை தெரிவித்தால், செயல் அலுவலர் இல்லை என்றும், அவர் வந்தவுடன் தகவல் தெரிவித்து, அவரின் உத்தரவு பெற்று பிரச்னைகளை சரிசெய்வதாகவும் அதிகாரிகள் பதில் அளித்து அனுப்பி விடுகின்றனர்.
    இதன் காரணமாக செங்கம் பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் குடிநீர், கழிவுநீர் கால்வாய்கள் அடைப்பு, தெருவிளக்கு பழுது போன்றவற்றை சரிசெய்யவும், பிறப்பு, இறப்புச் சான்றுகள் வழங்கவும் பேரூராட்சி அலுவலர்கள் விரைவான நடவடிக்கை எடுக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றர். எனவே, செங்கம் தேர்வுநிலைப் பேரூராட்சிக்கு உடனடியாக செயல் அலுவலரை நியமனம் செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என செங்கம் நகர பொதுமக்கள் எதிர்பார்கின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai