சுடச்சுட

    

    செய்யாறு வட்டத்தில் ஜமாபந்தி நிறைவு: 629 பேருக்கு   நலத் திட்ட உதவிகள்

    By DIN  |   Published on : 31st May 2017 08:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    செய்யாறு வட்டாட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஜமாபந்தி நிறைவு விழாவில், 629 பயனாளிகளுக்கு ரூ.10 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
    செய்யாறு வட்டாட்சியர் அலுவலகத்தில் 1426-ஆம் பசலி ஆண்டுக்கான வருவாய்த் தீர்வாயக் கணக்குத் தணிக்கை (ஜமாபந்தி) கடந்த 19-ஆம் தேதி தொடங்கி 30-ஆம் தேதி வரை மாவட்ட சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியர் பி.குணசேகரன் தலைமையில் நடைபெற்றது.
    ஜமாபந்தியின்போது, மொத்தம் 1,580 மனுக்கள் பெறப்பட்டன. இதில், 135 மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டு, நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்நிலையில், ஜமாபந்தியின் நிறைவு நாளில் விவசாய மாநாடு நிகழ்ச்சியும் நடைபெற்றது.
    இதில், சிறப்பு விருந்தினராக செய்யாறு தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் தூசி கே.மோகன் கலந்துகொண்டு, 629 பயனாளிகளுக்கு சுமார் ரூ.10 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை வழங்கிப் பேசினார். நிகழ்ச்சியில் வட்டாட்சியர் வி.ஜெயராமச்சந்திரன், தலைமையிடத்து துணை வட்டாட்சியர் எஸ்.அரிக்குமார், மண்டல துணை வட்டாட்சியர் எஸ்.முரளி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மூர்த்தி, உதயகுமார், வருவாய்த் துறை அலுவலர்கள் சங்க வட்டக் கிளைத் தலைவர் கோ.ஸ்ரீதர், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாவட்டத் தலைவர் ஏ.ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai