Enable Javscript for better performance
தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

    By DIN  |   Published on : 31st May 2017 08:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    போளூரில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளர்கள் சங்கம் சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    ஆர்ப்பாட்டத்துக்கு வட்டத் தலைவர் மணி தலைமை வகித்தார். துணைத் தலைவர் சேட்டு வரவேற்றார். ராதாகிருஷ்ணன், விநாயகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    இதில், வட்டச் செயலர் வேலன் பேசுகையில், டாஸ்மாக் மதுக் கடைகளை திறக்கும் வகையில், மாநில, மாவட்ட நெடுஞ்சாலைகளை மாநராட்சி, நகராட்சியிடம் ஒப்படைக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும். சாலைப் பராமரிப்பு பணிகளை தனியாரிடம் அளிக்கும் புதிய சாலை மேம்பாட்டுத் திட்டத்தைக் கைவிட வேண்டும். நெடுஞ்சாலைத் துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
    செயற்குழு உறுப்பினர்கள் லட்சுமணன், சண்முகம், நடராஜன், சகாதேவன், சின்னதம்பி மற்றும் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளர்கள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். வட்டப் பொருளாளர் மோகன் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai