சுடச்சுட

    

    நகைகளை ஏலம் விடுவதற்கு எதிர்ப்பு: வங்கிக்கு பூட்டுப் போட முயன்ற 28  விவசாயிகள் கைது

    By DIN  |   Published on : 31st May 2017 05:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வந்தவாசி அருகே தேசூரில் அடகு வைத்த நகைகளை ஏலம் விடுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, வங்கிக்கு பூட்டுப் போட முயன்ற விவசாயிகள் 28 பேர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர்.
    வந்தவாசியை அடுத்த தேசூரில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் கிளை உள்ளது. இந்த வங்கிக் கிளையில் சில விவசாயிகள் அடகு வைத்த நகைகள் காலக்கெடு முடிந்ததால் ஏலம் விடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டதாம்.
    இந்நிலையில், வறட்சி காரணமாக விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதால் நகைகளை ஏலம் விடக்கூடாது என்று கோரியும், ஏலம் விடுவதை கண்டித்தும் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் வங்கிக்கு பூட்டுப் போடும் போராட்டம் நடந்தது.
    இதையொட்டி, சங்கத்தின் மாநிலச் செயலர் தினேஷ் தலைமையில், வங்கி முன் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், விவசாயிகள் கையில் பூட்டுடன் வங்கி நோக்கிச் சென்றனர்.
    அப்போது, வங்கி முன் பாதுகாப்புக்காக நின்றிருந்த வந்தவாசி காவல் துணைக் கண்காணிப்பாளர் பொற்செழியன் தலைமையிலான தேசூர் போலீஸார், விவசாயிகளை தடுத்து நிறுத்தி 28 பேரை கைது செய்தனர். பின்னர், அவர்கள் தேசூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai