சுடச்சுட

    

    சேத்துப்பட்டை அடுத்த அனாதிமங்கலம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பெரணமல்லூர் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் குணசேகரன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார்.
    பள்ளியில் உள்ள கழிவறை, குடிநீர்த் தொட்டி, சுற்றுசூழல் ஆகியவற்றை உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் குணசேகரன் ஆய்வு செய்தார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடும் வெயில் தாக்கம் காரணமாக வரும் ஜூன் 7-ஆம் தேதியன்று பள்ளிகளை திறக்குமாறு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. பெரணமல்லூர் ஒன்றியத்தில் 73 தொடக்கப் பள்ளிகளும், 18 நடுநிலைப் பள்ளிகளும் உள்ளன. கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறக்கப்பட உள்ளதால், பள்ளியின் அடிப்படை வசதிகளை ஆய்வு செய்து வருகிறோம். வரும் கல்வியாண்டுக்கான பாடப்புத்தகங்கள் மாணவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மேலும், 5 வயது பூர்த்தியடைந்த 752 மாணவர்கள் கண்டறியப்பட்டு, அவர்களை பள்ளியில் சேர்க்க பெற்றோரிடம் அறிவுறுத்தியுள்ளோம் என்றார்.
    ஆய்வின்போது, வட்டார வளமைய மேற்பார்வையாளர் சுப்பிரமணி உடனிருந்தார்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai