சுடச்சுட

    

    திருவண்ணாமலையில் புகையிலை எதிர்ப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
    மே 31-ஆம் தேதி (புதன்கிழமை) உலக புகையிலை எதிர்ப்பு தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.
    இதையொட்டி, திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து புகையிலை எதிர்ப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
    ஊர்வலத்துக்கு திருவண்ணாமலை நகர்மன்ற ஆணையாளர் பாரிஜாதம் தலைமை வகித்தார். திருவண்ணாமலை சுகாதாரப் பணிகள் துணை இயக்குநரின் நேர்முக உதவியாளர் சுந்தரராஜ், நகர் நல அலுவலர் வினோத்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் மீரா, சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு விழிப்புணர்வு
    ஊர்வலத்தைத் தொடக்கி வைத்தார்.
    நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற ஊர்வலம், நகர ஆரம்ப சுகாதார நிலையத்தில் முடிவடைந்தது.
    இந்த ஊர்வலத்தில் செவிலியர் கல்லூரி மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.
    ஊர்வலத்தின்போது, புகையிலையை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவ, மாணவிகள் முழக்கங்களை எழுப்பியவாறு சென்றனர்.
    பின்னர், நகர ஆரம்ப சுகாதார நிலையத்தில் புகையிலையால் ஏற்படும் தீமைகள் குறித்த
    விழிப்புணர்வுக் கூட்டம் நடைபெற்றது.
    இதில், மருத்துவர்கள் பாலமுரளி, குரு, சுகாதார ஆய்வாளர் வினோத் கண்ணா, நகர ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai