Enable Javscript for better performance
மாநில ஹாக்கி போட்டி: சேலம் அணி முதலிடம்- Dinamani

சுடச்சுட

    

    தண்டராம்பட்டு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாநில அளவிலான 4-ஆம் ஆண்டு ஹாக்கி விளையாட்டுப் போட்டி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தப் போட்டியில் சேலத்தைச் சேர்ந்த அணி முதலிடம் பிடித்தது.
    போட்டி தொடக்க விழாவுக்கு திருவண்ணாமலை மாவட்ட ஹாக்கி சங்கத்தின் கௌரவத் தலைவர் சித்தார்த்தன் தலைமை வகித்தார். மாவட்ட ஹாக்கி சங்கத் தலைவர் பாபு, செயலர் சதீஷ்குமார், தொழிலதிபர் ரமேஷ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு போட்டிகளைத் தொடக்கி வைத்தனர்.
    இதில், பள்ளி மாணவர்களும், வெளி நபர்களும் பங்கேற்ற அணிகள் கலந்து கொண்டன. சேலம், கடலூர், தஞ்சாவூர், திருச்செங்கோடு, சீர்காழி, சைலம், திருவண்ணாமலை, தண்டராம்பட்டு, புதுச்சேரி பகுதிகளில் இருந்து 11 அணிகளைச் சேர்ந்த ஏராளமான விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.
    இறுதிப் போட்டியில் சேலம் அணி முதலிடம் பிடித்து ரூ.15,004 பரிசுத் தொகையை பெற்றது. புதுச்சேரி அணி 2-ஆவது இடத்தைப் பிடித்து ரூ.12,004 பரிசுத் தொகையும், தஞ்சாவூர் அணி 3-ஆம் இடம் பிடித்து ரூ.10,004 பரிசுத் தொகையும், தண்டராம்பட்டு அணி 4-ஆவது இடத்தைப் பிடித்து ரூ.5,004 பரிசுத் தொகையும் பெற்றன.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai