சுடச்சுட

    

    திருவண்ணாமலை அருகே ரத்தக் காயங்களுடன் மயக்க நிலையில் இருந்த சிறுமியை பொதுமக்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
    வெறையூரை அடுத்த டி.கல்லேரி கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி தனது மனைவியுடன் திங்கள்கிழமை வெளியூர் சென்றிருந்தாராம். வீட்டில் அவரது 15 வயது மகள் மட்டும் தனியாக தங்கியிருந்தாராம். செவ்வாய்க்கிழமை காலை நீண்ட நேரமாகியும் வீட்டின் கதவு திறக்கப்படவில்லையாம்.
    இதனால் சந்தேகமடைந்த அக்கம், பக்கத்தினர் கதவை திறந்து உள்ளே சென்றபோது, அந்தச் சிறுமி ரத்தக் காயங்களுடன் மயங்கிய நிலையில் இருந்தாராம். அவரது ஆடைகளும் களையப்பட்டு இருந்ததாம். இதையடுத்து, பொதுமக்கள் அவரை மீட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்த வெறையூர் போலீஸார் சிறுமியிடம் தொடர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai