Enable Javscript for better performance
போலி மருத்துவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    திருவண்ணாமலை மாவட்டம், போளூரில் போலி மருத்துவர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
    மாவட்ட சுகாதார இணை இயக்குநர் பாண்டியன் போளூரில் சனிக்கிழமை ஆய்வு செய்தார். அப்போது, போளூர் வீரப்பன் தெருவில் வசிக்கும் பன்னீர்செல்வம் (67), எம்.பார்ம் படித்துவிட்டு ஆங்கில மருத்துவச் சிகிச்சை அளித்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து, பன்னீர்செல்வத்தைப் பிடித்து போளூர் காவல் நிலையத்தில் சுகாதார இணை இயக்குநர் பாண்டியன் ஒப்படைத்தார். இதுகுறித்து போளூர் போலீஸார் வழக்குப் பதிந்து பன்னீர்செல்வத்தை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai