Enable Javscript for better performance
மாநில அறிவியல் கண்காட்சி: திருவண்ணாமலை பள்ளி முதலிடம்- Dinamani

சுடச்சுட

    

    மாநில அறிவியல் கண்காட்சி: திருவண்ணாமலை பள்ளி முதலிடம்

    By DIN  |   Published on : 22nd October 2017 05:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியில் திருவண்ணாமலை எம்.ஏ.காதர்சேட் நினைவு முஸ்லிம் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் முதலிடம் பிடித்தனர்.
    கரூர் மாவட்ட பள்ளி கல்வித் துறை சார்பில், 45-ஆவது மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி அண்மையில் நடைபெற்றது. இதில், பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்களது படைப்புகளை வைத்திருந்தனர்.
    திருவண்ணாமலை எம்.ஏ.காதர்சேட் நினைவு முஸ்லிம் உயர்நிலைப் பள்ளி சார்பில் கலந்து கொண்ட மாணவர்கள் கே.ஆஷிக், என்.முஹம்மத் அபுபக்கர், சித்திக் ஆகியோர் அமைத்திருந்த கண்காட்சி மாநில அளவில் முதலிடம் பிடித்தது.
    இதையடுத்து, தென்னிந்திய, தேசிய அளவிலான அறிவியல் கண்காட்சியில் கலந்து கொள்ள மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். முதலிடம் பிடித்த மாணவர்கள், வழிகாட்டி ஆசிரியர் பி.ஹயாத்பாஷா ஆகியோரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார், பள்ளித் தாளாளர் கே.எஸ்.ஹயாத் பாஷா மற்றும் ஆசிரியர், ஆசிரியைகள் சனிக்கிழமை பாராட்டினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai