திருவண்ணாமலையை அடுத்த களஸ்தம்பாடி கிராமத்தில் உலக தாய்ப்பால் வார விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு துரிஞ்சாபுரம் வட்டார மருத்துவ அலுவலர் ராஜா தலைமை வகித்தார். குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் சரண்யா, மேற்பார்வையாளர்கள் எஸ்.ரமணி, மகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தாய்ப்பால் கொடுப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்த விழிப்புணர்வு நாடகம், வில்லுப் பாட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
விழாவில் கொழு கொழு குழந்தைகள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், வினாடி - வினா போட்டிகளில் வெற்றி பெற்ற பெண்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.