திமுக தலைவர் கருணாநிதி காலமானதையொட்டி, ஆரணி எம்ஜிஆர் சிலை அருகில் கருணாநிதி உருவப் படத்துக்கு திமுகவினர் செவ்வாய்க்கிழமை இரவு மலரஞ்சலி செலுத்தினர்.
திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதி காலமானதையொட்டி, ஆரணியைச் சேர்ந்த திமுகவினர் முன்னாள் நகர்மன்றத் தலைவர் சாந்திலோகநாதன் தலைமையில், ஆரணி எம்ஜிஆர் சிலை அருகிலிருந்து மெளன ஊர்வலமாக அண்ணா சிலை வரை சென்றனர்.
பின்னர், மீண்டும் ஊர்வலமாக ஆரணி பழைய பேருந்து நிலையத்திலுள்ள எம்ஜிஆர் சிலைக்குச் சென்று, அங்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவப் படத்துக்கு சாந்திலோகநாதன் மலரஞ்சலி செலுத்தினார்.
உடன், முன்னாள் எம்எல்ஏ தயாநிதி, நிர்வாகிகள் கே.டி.ராஜேந்திரன், வழக்குரைஞர் ராஜன், ஓட்டல் குமார், பாலு, மணிமாறன், குட்டிநடராஜன், ஜெயக்குமார், லலிதா, மாலா, சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.