சேத்துப்பட்டு அருகே திங்கள்கிழமை இரவு தொழிலாளி மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
சேத்துப்பட்டை அடுத்த நெடுங்குணம் கிராமத்தைச் சேர்ந்தவர் முபாரக் (31). காய்கனி வாகனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். பாத்திமாபீவி என்ற மனைவியும்,
2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். திங்கள்கிழமை வேலைக்குச் சென்ற முபாரக், இரவு வீட்டுக்கு வரவில்லை.
அவரது உறவினர்கள் தேடிச் சென்றபோது, நெடுங்குணத்தில் உள்ள பேருந்து நிறுத்த நிழல் குடையில் முபாரக் சுய நினைவில்லாமல் கிடந்தார். சேத்துப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரை பரிசோதித்த மருத்துவர்கள், முபாரக் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இதுகுறித்து முபாரக்கின் தாய் ஜமீலா சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் அளித்தார். அதில் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தெரிவித்துள்ளார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து, இதுதொடர்பாக ஹபிப்ஜான் என்பவரை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.