வந்தவாசி பகுதியில் அமைந்துள்ள பச்சையம்மன் கோயில்களில் ஆடித் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.
வந்தவாசியை அடுத்த மும்முனி கிராமத்தில் ஸ்ரீபச்சையம்மன் சமேத மன்னார்சாமி கோயில் அமைந்துள்ளது. இங்கு ஆடித் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. கோயில் வளாகத்தில் பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தி, தங்களது நேர்த்திக் கடனை நிறைவேற்றினர். அதேபோல, வந்தவாசியை அடுத்த தேசூரில் அமைந்துள்ள ஸ்ரீமன்னாதீஸ்வரர் சமேத ஸ்ரீபச்சையம்மன் கோயிலில் தீமிதி விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர், நடைபெற்ற தீமிதி விழாவில் திரளான பக்தர்கள் தீமிதித்தனர்.
தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.