மக்கள் குறைதீர் கூட்டம்:  570 மனுக்கள் அளிப்பு

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 570 மனுக்கள் பெறப்பட்டன.
Published on
Updated on
1 min read

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 570 மனுக்கள் பெறப்பட்டன.
கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி முதியோர், மாற்றுத் திறனாளிகள், பொதுமக்களிடமிருந்து முதியோர் உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, வங்கிக் கடனுதவி, திருமண உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, சாதிச் சான்று உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 570 மனுக்களை பெற்றுக் கொண்டார்.
இந்த மனுக்கள் மீதும், ஏற்கெனவே பெறப்பட்ட மனுக்கள் மீதும் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
கூட்டத்தில் பயிற்சி ஆட்சியர் எம்.பிரதாப், மாவட்ட வருவாய் அலுவலர் பொ.ரத்தினசாமி, ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் க.லோகநாயகி, மகளிர் திட்ட அலுவலர் ப.ஜெயசுதா, சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் உமா மகேஸ்வரி, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சு.சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.