திருவண்ணாமலை மாவட்ட மைய நூலகத்தில் "வாசகர் விருந்து' என்ற இலக்கிய நிகழ்வு திங்கள்கிழமை நடைபெற்றது.
மாவட்ட மைய நூலகம், திருவண்ணாமலை அரசுக் கலைக் கல்லூரியின் தமிழ்த் துறை, மாவட்ட மைய நூலக வாசகர் வட்டம் ஆகியவை இணைந்து நடத்திய இந்த நிகழ்வுக்கு பாவலர் வையவன் தலைமை வகித்தார். எழுத்தாளர் நக்கீரன் எழுதிய "காடோடி' என்ற நூலை தொழிலதிபர் சி.எஸ்.துரை அறிமுகம் செய்தார்.
சமூகச் செயல்பாட்டாளர் இரா.ப.அண்ணாதுரை, நூல் குறித்து திறனாய்வு செய்து பேசினார். நிகழ்ச்சியில், முதல் நிலை நூலகர் பெ.வள்ளி, நல் நூலகர் சாயிராம், அரசுக் கல்லூரி தமிழ்த் துறைப் பேராசிரியர்கள் நெடுஞ்செழியன், சாந்தமூர்த்தி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள், மாவட்ட மைய நூலகப் பணியாளர்கள், வாசகர் வட்டப் பொறுப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.