வலிப்பு நோயால் அவதிப்பட்ட கர்ப்பிணி தற்கொலை

திருவண்ணாமலை அருகே வலிப்பு நோயால் அவதிப்பட்டு வந்த 7 மாத கர்ப்பிணி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
Published on
Updated on
1 min read

திருவண்ணாமலை அருகே வலிப்பு நோயால் அவதிப்பட்டு வந்த 7 மாத கர்ப்பிணி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
திருவண்ணாமலையை அடுத்த தேவனந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி ஆறுமுகம் (56). இவரது மகள் சந்தியாவுக்கும் திருவண்ணாமலையை அடுத்த பண்டிதப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் பாலாஜிக்கும் அண்மையில் திருமணம் நடைபெற்றது.
7 மாத கர்ப்பிணியாக இருந்த சந்தியா, சில தினங்களாக பெற்றோர் வீட்டில் இருந்து வந்தார். இவருக்கு அடிக்கடி வலிப்பு வருவது வழக்கமாம். இதனால், மனமுடைந்திருந்த அவர் ஆகஸ்ட் 3-ஆம் தேதி வீட்டில் யாரும் இல்லாத போது பூச்சிக் கொல்லி மருந்து குடித்து மயங்கி விழுந்தார். உறவினர்கள் அவரை மீட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், தீவிர சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், அங்கு சிகிச்சைப் பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தார்.
இதுகுறித்து, கீழ்பென்னாத்தூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். திருமணமாகி ஓராண்டுக்குள்ளாகவே இந்த தற்கொலை சம்பவம் நடந்துள்ளதால்,  திருவண்ணாமலை கோட்டாட்சியர் எஸ்.தங்கவேலுவும் விசாரணை மேற்கெணண்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.