வந்தவாசியை அடுத்த வெடால் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீபச்சையம்மன் கோயிலில் தீமிதி திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, கடந்த வெள்ளிக்கிழமை கொடியேற்றம், காப்பு கட்டுதல், சனிக்கிழமை அம்மன் வீதி உலா, ஞாயிற்றுக்கிழமை ஊரணி பொங்கல், திங்கள்கிழமை அக்னி கரகம் எடுத்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை தீமிதி திருவிழா நடைபெற்றது. இதில், வெடால் மற்றும் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தியதுடன், அம்மனை வழிபட்டனர்.