திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் தங்களது வேலைவாய்ப்புப் பதிவை கணினிமயமாக்க, ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரில் அணுகலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது.
இதுகுறித்து திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருவண்ணாமலை மாவட்ட முன்னாள் படைவீரர்களின் வேலைவாய்ப்புப் பதிவு முற்றிலும் கணினி மயமாக்கப்படுகிறது.
எனவே, மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் தங்களது சாதிச் சான்று, அசல் படைவிலகல் சான்று, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இருந்து பெறப்பட்ட பதிவு அட்டை, கல்விச் சான்று உள்ளிட்ட தங்களிடம் உள்ள அனைத்து ஆவணங்களுடன் திருவண்ணாமலை மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலத்தை அலுவலக வேலைநாள்களில் ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் நேரில் அணுகி பதிவை சரிபார்த்துக் கொள்ளலாம் என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.