இசை பயிற்சிப் பள்ளி சார்பில் முப்பெரும் விழா 

வந்தவாசி ஸ்ரீராகம் இசை பயிற்சிப் பள்ளி சார்பில் முப்பெரும் விழா வந்தவாசியில் சனிக்கிழமை நடைபெற்றது. 

வந்தவாசி ஸ்ரீராகம் இசை பயிற்சிப் பள்ளி சார்பில் முப்பெரும் விழா வந்தவாசியில் சனிக்கிழமை நடைபெற்றது.
 இதில், நாலாயிர திவ்ய பிரபந்த பாடல்கள் பாடும் விழா, மாணவர்கள் கீபோர்டு வாசித்தல் விழா, கிராமிய இசைக் கலைஞர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றன.
 விழாவுக்கு புரிசை ந.சுப்பிரமணி தம்பிரான் தலைமை வகித்தார். பெ.பார்த்திபன் வரவேற்றார். மாம்பட்டு ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் அறக்கட்டளைச் செயலர் ஆறு.லட்சுமண சுவாமிகள் நாலாயிர திவ்ய பிரபந்த பாடல்கள் பாடும் விழாவை தொடக்கி வைத்தார்.
 பின்னர், அம்மாப்பேட்டை கிருஷ்ணமூர்த்தி முன்னிலையில், ஸ்ரீராகம் இசைப் பயிற்சி பள்ளி மாணவர்களின் கீபோர்டு வாசித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து, தமிழக கலை, பண்பாட்டுத் துறை முன்னாள் துணை இயக்குநர் வ.ஜெயபால் கிராமிய இசைக் கலைஞர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கிப் பேசினார்.
 விழாவில், வந்தவாசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் மூ.சங்கர், வந்தவாசி ஸ்ரீமந் நாதமுனி வைணவ சபை முதன்மைச் செயலர் கு.மணிவண்ணன் மற்றும் இரா.சிவக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 
 
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com