டெங்கு, மர்மக் காய்ச்சல்: பொதுமக்கள் புகார் அளிக்க ஆட்சியரகத்தில் கட்டுப்பாட்டு அறை

திருவண்ணாமலை மாவட்டத்தில் டெங்கு, மர்மக் காய்ச்சல் குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்கும் வகையில்

திருவண்ணாமலை மாவட்டத்தில் டெங்கு, மர்மக் காய்ச்சல் குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்கும் வகையில், மாவட்ட ஆட்சியரகத்தில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகள், குக்கிராமங்களில் 100 சதவீதம் டெங்கு காய்ச்சலை கட்டுக்குள் கொண்டு வரும் நோக்கில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனி கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
எனவே, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள், தங்கள் கிராமத்தில் மர்மக் காய்ச்சல், டெங்கு காய்ச்சல் தொடர்பாக புகார்கள் இருப்பின், ஆட்சியர் அலுவலகக் கட்டுப்பாட்டு அறையை 04175 - 233303 என்ற எண்ணிலோ, 1800-425-3694 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலோ தெரிவிக்கலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com