தேசிய அறிவியல் கண்காட்சியில் பங்கேற்ற பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

தேசிய அளவிலான அறிவியல் கண்காட்சியில் பங்கேற்ற திருவண்ணாமலை பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.புதுதில்லி தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில், தேசிய அளவிலான அறிவியல் கண்காட்சி அண்மையில் நடைபெற்றது. குஜராத் மாநிலம், அகமதாபாத் நகரில் நவீன வீடு (ஸ்மார்ட் ஹவுஸ்) என்ற தலைப்பில் நடைபெற்ற கண்காட்சியில், தமிழகத்தின் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் தங்களது அறிவியல் படைப்புகளை காட்சிக்கு வைத்திருந்தனர்.இதில், மாநில அளவிலானகண்காட்சியில் முதலிடம் பிடித்த திருவண்ணாமலை எம்.ஏ. காதர்சேட் நினைவு முஸ்லிம் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் கே.ஆஷிக், என்.முஹம்மத் அபுபக்கர் சித்திக் ஆகியோர் தங்களது படைப்புகளை வைத்திருந்தனர்.தேசிய அளவிலான கண்காட்சியில் பங்கேற்ற மாணவர்கள், வழிகாட்டி ஆசிரியர்கள் பி.ஹயாத்பாஷா, கே.ரவிச்சந்திரன் ஆகியோரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார், பள்ளித் தாளாளர் கே.எஸ்.ஹயாத் பாஷா, மாவட்டக் கல்வி அலுவலர் எஸ்.அருள்செல்வம், பள்ளித் தலைமை ஆசிரியர் ஏ.கே.அஜ்மீர் பாஷா ஆகியோர் சனிக்கிழமைபாராட்டினர். 

தேசிய அளவிலான அறிவியல் கண்காட்சியில் பங்கேற்ற திருவண்ணாமலை பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
புதுதில்லி தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில், தேசிய அளவிலான அறிவியல் கண்காட்சி அண்மையில் நடைபெற்றது. குஜராத் மாநிலம், அகமதாபாத் நகரில் நவீன வீடு (ஸ்மார்ட் ஹவுஸ்) என்ற தலைப்பில் நடைபெற்ற கண்காட்சியில், தமிழகத்தின் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் தங்களது அறிவியல் படைப்புகளை காட்சிக்கு வைத்திருந்தனர்.
இதில், மாநில அளவிலான
கண்காட்சியில் முதலிடம் பிடித்த திருவண்ணாமலை எம்.ஏ. காதர்சேட் நினைவு முஸ்லிம் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் கே.ஆஷிக், என்.முஹம்மத் அபுபக்கர் சித்திக் ஆகியோர் தங்களது படைப்புகளை வைத்திருந்தனர்.
தேசிய அளவிலான கண்காட்சியில் பங்கேற்ற மாணவர்கள், வழிகாட்டி ஆசிரியர்கள் பி.ஹயாத்பாஷா, கே.ரவிச்சந்திரன் ஆகியோரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார், பள்ளித் தாளாளர் கே.எஸ்.ஹயாத் பாஷா, மாவட்டக் கல்வி அலுவலர் எஸ்.அருள்செல்வம், பள்ளித் தலைமை ஆசிரியர் ஏ.கே.அஜ்மீர் பாஷா ஆகியோர் சனிக்கிழமை
பாராட்டினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com