பள்ளியில் ஷேக்ஸ்பியர் ஆங்கில நாடகம்

ஆரணி - சேத்பட் சாலையில் உள்ள ஆரஞ்சு பிரிட்டிஷ் அகாதெமி பள்ளி வளாகத்தில் மாணவ, மாணவிகள் பங்கேற்ற


ஆரணி - சேத்பட் சாலையில் உள்ள ஆரஞ்சு பிரிட்டிஷ் அகாதெமி பள்ளி வளாகத்தில் மாணவ, மாணவிகள் பங்கேற்ற ஷேக்ஸ்பியர்ஆங்கில நாடகம் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.
ஆங்கில அறிவுத்திறன், சொல்லாற்றல் ஆகியவற்றை வெளிக்கொணரும் விதமாக, 16-ஆம் நூற்றாண்டு ஷேக்ஸ்பியர் நாடகமான தி மெர்சன்ட் ஆப் வெனிஸ் மாணவ, மாணவிகளால் மேடையில் அரங்கேற்றப்பட்டது. நாடக விழாவை ஆரஞ்சு பிரிட்டிஷ் அகாதெமி பள்ளியின் துணைத் தாளாளர் அபர்ணா சிவக்குமார் குத்துவிளக்கேற்றி தொடக்கிவைத்தார். நிறுவனர், தாளாளர் மு.சிவக்குமார் தலைமை வகித்து பேசுகையில், வரும் கல்வியாண்டின் (2019 - 2020) சிபிஎஸ்இ பாடத் திட்டத்துக்கான மாணவர் சேர்க்கை எல்கேஜி முதல் 10-ஆம் வகுப்பு வரை நடைபெற்றுக்கொண்டிருப்பதாகத் தெரிவித்தார்.
விழாவில், சிறப்பு விருந்தினராக லயோலா கல்லூரியின் துணை முதல்வர் வின்சென்ட் ஜுலியட் ரவி கலந்து கொண்டு மாணவ, மாணவிகளை வாழ்த்தினார்.
முன்னதாக, முதல்வர் மு. செந்தில்குமார் வரவேற்றார். பள்ளியின் டீன் ஆ. அரசப்பன் நன்றி கூறினார். விழா ஏற்பாடுகள் பள்ளி முதல்வர் ஆ.பிரபு மற்றும் துணை முதல்வர்கள், ஆசிரியர்கள், ஆசிரியைகள் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com