Enable Javscript for better performance
ஆரணி கோட்டை மைதானத்தில்ரூ.75 லட்சத்தில் அமைக்கப்பட்ட நடை பாதை திறப்பு- Dinamani

சுடச்சுட

    

    ஆரணி கோட்டை மைதானத்தில்ரூ.75 லட்சத்தில் அமைக்கப்பட்ட நடை பாதை திறப்பு

    By DIN  |   Published on : 09th February 2018 02:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆரணி கோட்டை மைதானத்தில் ரூ.75 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட நடை பாதை, சுற்றுச்சுவர் ஆகியவற்றை அமைச்சர்கள் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், பா.பாலகிருஷ்ணாரெட்டி ஆகியோர் புதன்கிழமை இரவு திறந்து வைத்தனர்.
    ஆரணி கோட்டை மைதானத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.75 லட்சம் செலவில் நடைபாதை, சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. இந்தப் பணிகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து புதன்கிழமை திறப்பு விழா நடைபெற்றது. இதில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், இளைஞர் நலன், விளையாட்டுத் துறை அமைச்சர் பா.பாலகிருஷ்ணாரெட்டி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு நடை பாதை,
    சுற்றுச்சுவரை திறந்து வைத்தனர்.
    விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தலைமை வகித்தார். ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் செஞ்சி வே.ஏழுமலை, செய்யாறு எம்எல்ஏ தூசி மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    மேலும், இதில் மாவட்ட விளையாட்டு, இளைஞர் நல அலுவலர் இரா.ஜெயகுமாரி, நகராட்சி ஆணையாளர் த.செளந்தர்ராஜன், வழக்குரைஞர் க.சங்கர், நகரச் செயலர் அசோக்குமார், ஒன்றியச் செயலர்கள் பி.ஆர்.ஜி.சேகர், வேலு, நகர நிர்வாகி பாரிபாபு, முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவர் அ.கோவிந்தராசன், பாசறை மாவட்டச் செயலர் ஜி.வி.கஜேந்திரன், முன்னாள் ஒன்றியக் கவுன்சிலர் திருமால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai