Enable Javscript for better performance
இட பிரச்னை: தம்பதி உள்பட மூவருக்கு வெட்டு: 3 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    போளூரில் இட பிரச்னை காரணமாக ஏற்பட்ட தகராறில் தம்பதி உள்பட 3 பேருக்கு கத்தி வெட்டு விழுந்தது. இது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து 3 பேரை வியாழக்கிழமை கைது செய்தனர்.
    போளூர் மாற்றுப்பாதைச் சாலையில் (டிரைவர்ஷன் ரோடு) வசிப்பவர் பாண்டியன். இவர், தனது வீட்டின் முன் கடை கட்டி வருகிறார். இதன் அருகில் போளூர் நரசிம்மன் தெருவைச் சேர்ந்த வேணுகோபால் நாடுயு மகன்களான அரிகரன் (47), ஸ்ரீதர் (45) ஆகியோர் கடை நடத்தி வருகின்றனர்.
    இந்த நிலையில், பாண்டியன், அரிகரன் ஆகிய இருவருக்கும் இடையே புதன்கிழமை இரவு இடத் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, அரிகரன், ஸ்ரீதர் மற்றும் அவரது ஆதரவாளர்களான ஆர்.குண்ணத்தூர் ஊôட்சியைச் சேர்ந்த பொன்னுசாமி மகன் கிருஷ்ணமூர்த்தி (35), பாபு ஆகியோரும், பாண்டியனுக்கு ஆதரவாக அவரது மனைவி கலையரசி, மகன் கௌதமன் ஆகியோரும் தகராறில் ஈடுபட்டனர்.
    இதனால் ஆத்திரமடைந்த கிருஷ்ணமூர்த்தி மரம் வெட்டும் கத்தியால் பாண்டியன், கலையரசி, கௌதமன் ஆகிய 3 பேரையும் கத்தியால் வெட்டினாராம். இதில் காயமடைந்த அவர்கள் 3 பேரும் போளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தனர். இதையடுத்து, போளூர் காவல் நிலையத்தில் கலையரசி அளித்த புகாரின்பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து கிருஷ்ணமூர்த்தி, அரிகரன், ஸ்ரீதர் ஆகிய 3 பேரை கைது செய்தனர். பாபுவை தேடி வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai