Enable Javscript for better performance
கிராம உதவியாளர்களுக்குஅலுவலக உதவியாளருக்கு இணையான ஊதியம் வழங்கக் கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    கிராம உதவியாளர்களுக்குஅலுவலக உதவியாளருக்கு இணையான ஊதியம் வழங்கக் கோரிக்கை

    By DIN  |   Published on : 09th February 2018 02:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வருவாய்த் துறையில் பணிபுரியும் கிராம உதவியாளர்களுக்கு அந்தத் துறையில் பணிபுரியும் அலுவலக உதவியாளர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு வருவாய்த் துறை கிராம உதவியாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
    வந்தவாசியில் புதன்கிழமை நடைபெற்ற அந்தச் சங்கத்தின் வந்தவாசி வட்டக்கிளை ஆலோசனைக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    கூட்டத்துக்கு வட்டக்கிளைத் தலைவர் டி.ஜி.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். எஸ்.புனிதா வரவேற்றார். திருவண்ணாமலை மாவட்டத் தலைவர் மு.பிரபாகரன் சிறப்புரை ஆற்றினார். மாவட்ட துணைத் தலைவர் ஆர்.ஆறுமுகம், வட்டக் கிளைச் செயலர் ஜெ.ஆதம், பொருளாளர் எம்.கணபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில், கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க கோரி நடைபெற உள்ள தொடர் போராட்டங்களில் பங்கேற்பது என்பது உள்பட மேலும் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai