Enable Javscript for better performance
செங்கத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    செங்கத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.
    செங்கம் துக்காப்பேட்டை முதல் போளூர் சாலை மேலம்பாலம் வரை சாலை குறுகிய நிலையில் இருப்பதாகவும், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்களும், வியாபாரிகளும் சிரமப்பட்டு வருதாகவும் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், செங்கம் பேரூராட்சி நிர்வாகத்துக்கு புகார் மனுக்கள் சென்றன.
    அதனடிப்படையில், செங்கம் துக்காப்பேட்டை முதல் போளூர் சாலை மேம்பாலம் வரை ஆக்கிரமிப்புகளை அகற்ற உள்ளதாக கடந்த 2 நாள்களுக்கு முன்பு துண்டுப் பிரசுரம் விநியோகித்தும், தண்டோரா அடித்தும் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
    இந்த நிலையில், ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் வியாழக்கிழமை தொடங்கின. அப்போது, டிஎஸ்பி சுந்தரமூர்த்தி, வட்டாட்சியர் உதயகுமார், பேரூராட்சி செயல் அலுவலர் கோபால் ஆகியோர் உடனிருந்தனர்.
    சுமார் 3 நாள்களுக்கு நடைபெறும் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியின்போது, செங்கம் துக்காப்பேட்டை முதல் போளூர் சாலை மேம்பாலம் வரை பாரபட்சம் இல்லாமல் ஆக்கிரமிப்புகளை அகற்றி, இந்தப் பகுதியில் தார்ச் சாலை அமைக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai