Enable Javscript for better performance
செய்யாறில் கத்தியைக் காட்டி வழிப்பறி: 4 பேர் கைது: ரூ.2.50 லட்சம், 3 பைக்குகள் பறிமுதல்- Dinamani

சுடச்சுட

    

    செய்யாறில் கத்தியைக் காட்டி வழிப்பறி: 4 பேர் கைது: ரூ.2.50 லட்சம், 3 பைக்குகள் பறிமுதல்

    By DIN  |   Published on : 09th February 2018 02:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    செய்யாறு, சுற்றுவட்டாரப் பகுதிகளில் கத்தியைக் காட்டி மிரட்டி வழிப்பறி, கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டதாக 4 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.2.50 லட்சம் ரொக்கம், 3 பைக்குகள், 5 செல்லிடப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
    செய்யாறு, அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பணியாற்றும் அரசுப் பள்ளி ஆசிரியைகள், அரசு ஊழியர்களை நோட்டமிடும் கொள்ளையர்கள், அவர்களை பைக்குகளில் பின் தொடர்ந்து சென்று கத்தியைக் காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபடும் சம்பவங்கள் நடந்து வந்தன.
    மேலும், தனியாகவுள்ள வீடுகளில் நுழைந்து கத்தியை காட்டி மிரட்டி பணம், நகைகளை கொள்ளையடித்துச் செல்லும் சம்பவங்களும் அதிகரித்து வந்தன. இதுபோன்ற சம்பவங்களால் பாதிக்கப்பட்ட பலர் காவல் நிலையங்களில் புகார் அளித்தனர்.
    இந்தப் புகார்களின் அடிப்படையில், செய்யாறு டிஎஸ்பி குணசேகரன் உத்தரவின்பேரில், காவல் ஆய்வாளர்கள் சுதாகர், சாரதி மற்றும் போலீஸார் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடுவோரை பிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இந்த நிலையில், செய்யாறு மேம்பாலம் அருகே போலீஸார் செவ்வாய்க்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, போலீஸாரைப் பார்த்தவுடன் 2 பைக்குகளில் தப்பிச் செல்ல முயன்றவர்களை தூரத்திப் பிடித்ததுடன், காவல் நிலையத்துக்கு அவர்களை கொண்டு சென்று போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
    விசாரணையில், பிடிபட்டவர்கள் பல்வேறு வழிப்பறி, கொள்ளைச் சம்பவங்களில் தொடர்புடையவர்கள் என்பது தெரியவந்தது.
    இது தொடர்பாக செய்யாறு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, செய்யாறு பெரும்புலிமேடு கிராமம் கோபி ( 32), பூவரசன் (20), மேல்மட்டை விண்ணமங்கலம் கிராமம் திருமால் (20), ஆற்காடு தாமரைபாக்கம் கிராமம் பிரசாந்த் (20) ஆகியோரை புதன்கிழமை கைது செய்தனர்.
    மேலும், அவர்களிடமிருந்து ரூ.2.50 லட்சம் ரொக்கம், 3 பைக்குகள், 5 செல்லிடப்பேசிகள், 3 கிராம் தங்கம், 200 கிராம் வெள்ளி நகைகள் மற்றும் கொள்ளையடிக்கப் பயன்படுத்தப்பட்ட 3 கத்திகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
    பின்னர், கைது செய்யப்பட்ட 4 பேரையும் வந்தவாசி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai