Enable Javscript for better performance
மாநில அளவிலான கிரிக்கெட்: பாலிடெக்னிக் மாணவர்கள் சிறப்பிடம்- Dinamani

சுடச்சுட

    

    மாநில அளவிலான கிரிக்கெட்: பாலிடெக்னிக் மாணவர்கள் சிறப்பிடம்

    By DIN  |   Published on : 09th February 2018 02:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மாநில அளவிலான கிரிக்கெட் போட்டியில் திருவண்ணாமலை குமரன் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் சிறப்பிடம் பிடித்தனர்.
    திருநெல்வேலி சங்கர் தொழில்நுட்பக் கல்லூரியில் மாநில அளவிலான பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கான கிரிக்கெட் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. இதில், தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களைச் சேர்ந்த 11 மண்டலங்களில் வெற்றி பெற்ற அணிகளின் வீரர்கள் பலர் கலந்து கொண்டனர்.
    திருவண்ணாமலை குமரன் பாலிடெக்னிக் கல்லூரி சார்பில் கலந்து கொண்ட மாணவர்கள், மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்து சாதனை படைத்தனர். மேலும், இயந்திரவியல் துறை மாணவர் கே.லோகேஷ்குமார், மேன் ஆஃப் தி மேட்ச், மேன் ஆஃப் தி சீரிஸ் விருதுகளைப் பெற்றார்.
    போட்டிகளில் வென்ற மாணவர்களை கல்லூரி துணைத் தலைவர் எ.வ.குமரன், இயக்குநர் பொன்.முத்து, முதல்வர் எம்.ரவிச்சந்திரன், உடற்கல்வி இயக்குநர் என்.சவுந்தர்ராஜன் மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் வியாழக்கிழமை பாராட்டினர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai