Enable Javscript for better performance
மாநில கோ - கோ போட்டியில் சிறப்பிடம்: கொளக்குடி அரசுப் பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு- Dinamani

சுடச்சுட

    

    மாநில கோ - கோ போட்டியில் சிறப்பிடம்: கொளக்குடி அரசுப் பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு

    By DIN  |   Published on : 09th February 2018 02:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மாநில அளவிலான கோ - கோ போட்டியில் சிறப்பிடம் பிடித்த திருவண்ணாமலையை அடுத்த கொளக்குடி அரசுப் பள்ளி மாணவிகளை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி பாராட்டினார்.
    மாநில அளவிலான பள்ளி மாணவிகளுக்கான கோ - கோ போட்டிகள் அண்மையில் திருநெல்வேலியில் நடைபெற்றன. இதில், தமிழகத்தின் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.
    வேலூர் மண்டல அணி சார்பில், திருவண்ணாமலையை அடுத்த கொளக்குடி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகள் கலந்து கொண்டு மூன்றாம் இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றனர்.
    வெற்றி பெற்ற மாணவிகளை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் முனியன், பள்ளித் தலைமை ஆசிரியர் ஜெ.காயத்ரி, உடற்கல்வி ஆசிரியர் பி.ராமமூர்த்தி ஆகியோர் புதன்கிழமை பாராட்டினர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai