Enable Javscript for better performance
மேலப்புஞ்சை ஸ்ரீனிவாசப் பெருமாள் கோயிலில் வருடாபிஷேகம்- Dinamani

சுடச்சுட

    

    மேலப்புஞ்சை ஸ்ரீனிவாசப் பெருமாள் கோயிலில் வருடாபிஷேகம்

    By DIN  |   Published on : 09th February 2018 02:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    செங்கத்தை அடுத்த மேலப்புஞ்சை கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீனிவாசப் பெருமாள் கோயிலில் வியாழக்கிழமை வருடாபிஷேகம் நடைபெற்றது.
    இந்தக் கோயிலில் கும்பாபிஷேம் நடைபெற்று ஓராண்டு நிறைவு பெற்றதையொட்டி வருடாபிஷேகம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு, வியாழக்கிழமை அதிகாலை முதல் சுவாமிக்கு சிறப்புப் பூஜை, ஹோமம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
    மேலும், ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீனிவாசப் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் வாணவேடிக்கையுடன் வீதியுலா வந்தார். தொடர்ந்து, கோயில் வளாகத்தில் திருவண்ணாமலை யாதவர் மடத்தின் தலைவர் சீனுவாசன் தலைமையில், அன்னதானம், பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஏற்பாடுகளை விழாக் குழுவினர், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai