Enable Javscript for better performance
ரயில் மோதியதில் இளைஞர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    திருப்பத்தூர் அருகே ரயில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற போது ரயில் மோதியதில் இளைஞர் இறந்தார்.
    நாட்டறம்பள்ளியை அடுத்த வேப்பல்நத்தம் பகுதி, வீரப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன் (21). இவர், தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவர், புதன்கிழமை இரவு திருப்பத்தூர்-ஜோலார்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையேயான தண்டவாளத்தைக் கடக்க முயன்றுள்ளார். அப்போது, ஜோலார்பேட்டை மார்க்கமாக சென்னை நோக்கிச் சென்ற ரயில் மோதியதில் நிகழ்விடத்திலேயே இறந்தார்.
    தகவலறிந்த ஜோலார்பேட்டை ரயில்வே போலீஸார் அங்கு சென்று சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai