Enable Javscript for better performance
20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி: வருவாய்த் துறையினர் 2-ஆவது நாளாகப் போராட்டம்- Dinamani

சுடச்சுட

    

    20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி: வருவாய்த் துறையினர் 2-ஆவது நாளாகப் போராட்டம்

    By DIN  |   Published on : 09th February 2018 02:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, திருவண்ணாமலை மாவட்டத்தில் வருவாய்த் துறையினர் 2-ஆவது நாளாக வியாழக்கிழமையும் சிறு விடுப்பு எடுத்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்கத்தினர் தமிழகம் முழுவதும் புதன், வியாழக்கிழமைகளில் சிறு விடுப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்பட 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.
    திருவண்ணாமலை மாவட்டத்திலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி 2-ஆவது நாளாக வியாழக்கிழமை தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்கத்தினர் ஒட்டுமொத்தமாக சிறு விடுப்பு எடுத்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், வருவாய்த் துறை பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
    வேறு சில சங்கங்கள் இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்றாலும், வழக்கமாக நடைபெறும் பணிகள் பாதிக்கப்பட்டன.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai